இந்தி திரையுலகினர் தங்களது படத்திற்கு வெவ்வேறு வகையில் விளம்பரபடுத்தி வருகிறார்கள். தற்போது இந்த விஷயத்தில் பாலுவுட்டை பின்பற்றுகிறது கோலிவுட்.
விரைவில் வெளியாக இருக்கும் 'பில்லா 2' படத்தினை மக்களிடம் கொண்டு செல்ல, இணையவாசிகளைக் கவர, புது யுக்தியை கையாள்கிறார்கள்.
அஜீத்தின் ரசிகர்களுக்கு' பில்லா 2' படக்குழு புதுப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது.
" தமிழ்ப் புத்தாண்டு முதல் படம் வெளியாகும் வரை பில்லா 2 படத்தினை விளம்பரப்படுத்த இருக்கிறோம். ரசிகர்களுக்கான போட்டி ஒன்றையும் அறிவிக்கிறோம். ' பில்லா 2 ' படத்திற்கான டிஜிட்டல் போஸ்டரை நீங்களே வடிவமைக்கலாம். இதுவரை வெளியான 'பில்லா 2' போஸ்டர்களையும், இனி வெளிவர இருக்கும் புகைப்படங்களையும் அதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பின்னணி இசைக்கு பில்லா தீம் ம்யூசிக்கையோ அல்லது பிற இசையையோ பயன்படுத்தி 10 முதல் 15 நொடிகளுக்குள் 'பில்லா 2' டிஜிட்டல் போஸ்டரை உருவாக்கி billa2contests@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மே மாதம் 15-ம் தேதி வரை இப்போட்டி நடக்கும். சிறந்த 10 டிஜிட்டல் போஸ்டர்களைத் தேர்ந்தெடுத்து ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் இணையங்கள் வழியே பதிவேற்றம் செய்யப்படும்.
அங்கு நடைபெறும் வாக்கெடுப்பில் 5 சிறந்த டிஜிட்டல் போஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு,' பில்லா 2' படத்திற்கான சிறப்புக் காட்சிக்கும் வரவேற்கப்படுவார்கள். " என அறிவித்திருக்கிறது தயாரிப்புத் தரப்பு
முன்னெல்லாம் ரசிகர்கள் பட ரிலீஸுக்கு போஸ்டர் ஒட்டுவாங்க.. இனிமே அவங்களே போஸ்டர் டிசைனும் பண்ணி அனுப்ப ஆரம்பிச்சுருவாங்க போல!
No comments:
Post a Comment