தனுஷ்-ஸ்ருதி ஜோடியாக நடித்த 3 படம் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி 3 படத்தை ரிலீஸ் செய்த ஆந்திர தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான நட்டி குமார் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
தனுஷ்-ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு உரிமையை ரூ.4.3 கோடிக்கு வாங்கினேன். ஆந்திராவில் தனுசுக்கு உள்ள மார்க்கெட் ரூ.10 லட்சம்தான். இவ்வளவு பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்குகிறாயே என்று பலரும் என்னை கண்டித்தனர்.
ரஜினி குடும்பத்தினர் மீது இருந்த நம்பிக்கையில் படத்தை வாங்கினேன். ஐஸ்வர்யா இயக்கி இருந்ததால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று கருதினேன். 3 படத்தை ஆந்திராவில் விளம்பரபடுத்துவதற்காக ஏப்ரல் 1-ந்தேதி ஐதராபாத் வருவதாக தனுசும், ஐஸ்வர்யாவும் என்னிடம் உறுதி அளித்தனர். ஆனால் அதன்படி அவர்கள் வரவில்லை.
படத்தின் சிறப்பு காட்சிக்கு வருவதாக சொல்லியும் வரவில்லை. இருவரும் என்னை ஏமாற்றி விட்டனர். ஆந்திராவில் இந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் எனக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நட்டி குமார் கூறினார்.
No comments:
Post a Comment