தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்கள். ஆனால் ரஜினி மற்றும் கமல் இதுவரை எந்த ஒரு விளம்பரத்திலும் நடித்தது இல்லை.
முதன் முறையாக கமல் விளம்பர படங்களில் நடிக்க இருக்கிறார்.
ALLIANCE MEDIA AND ENTERTAINMENT LTD என்ற நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார் கமல். இந்நிறுவனம் நடிகர்/நடிகைகளை விளம்பரப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனமாகும்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், சைஃப் அலிகான், கரினா கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்களை தங்களது நிறுவனம் மூலம் விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறது.
இவர்களை தொடர்ந்து கமலும் இந்நிறுவனத்தின் மூலம் விளம்பரங்களில் நடிக்க இருக்கிறார். விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தினை நற்பணி மற்றும் சமுதாயத் தொண்டு பணிகளுக்கு செலவழிக்க பயன்படுத்த உள்ளதாக கமல் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் சமூக அக்கறை உள்ள நிறுவனங்களின் விளம்பரங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
No comments:
Post a Comment