நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. முடிவுகளும் இன்று மாலையே வெளியிடப்பட உள்ளன.
இதில் காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிடுகின்றனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடக்க உள்ளது. இத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 543 பேரும், டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள் 245 பேரும் ஓட்டுப்போடுகிறார்கள்.
ஓட்டுப்பதிவு முடிந்து மாலை 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என தெரிகிறது..இதையொட்டி தேர்தல் அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஓட்டு எண்ணிக்கைக்காக இரு சிறப்பு அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் நியமித்துள்ளார்.
No comments:
Post a Comment