Friday, December 24, 2010

காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!



பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படுகிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுலின் பேச்சுக்கள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. எனது பாட்டி மற்றும் பெரியம்மா நடிகை மாயா போன்றோரெல்லாம் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். வளர்ந்ததும் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்தது. காங்கிரசில் சேரலாம் என முடிவு செய்தேன். என் குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் என்பதால் அந்த கட்சியை தேர்வு செய்தேன். ராகுல் மனதில் பட்டதை அப்படியே பேசுகிறார். அவரது பேச்சுக்களால் நான் ஈர்ப்பாகி விட்டேன். கையில் தற்போது சில படங்கள் உள்ளன. அதை முடித்து விட்டு காங்கிரஸில் சேர்ந்து விடுவேன். பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். அரசியல் என்பது மக்களுக்கு சமூக பணிகள் செய்ய நல்ல களம். எனவேதான் காங்கிரஸ் கட்சிக்கு போகிறேன். சட்டசபைத் தேர்தலிலும் பிரசாரம் செய்ய உள்ளேன், என்று கூறியுள்ளார்.


1 comment:

  1. நாட்டிற்கு ரொம்ப அவசியமான விசயம்.

    Wish You Happy New Year
    நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
    http://sakthistudycentre.blogspot.com
    என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

    ReplyDelete