Thursday, January 13, 2011

ஆடுகளம் பார்த்து தனுஷின் நடிப்பை பாராட்டிய ரஜினி


"எனக்கு 'முள்ளும் மலரும்' படம் எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ, அதைப் போல் தனுஷ்க்கு 'ஆடுகளம்' அமையும் என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்து பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் 'ஆடுகளம்'. நாயகியாக தபாஷி அறிமுமாகிறார். 'பொல்லாதவன்' வெற்றியை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் இரண்டு முறை பார்த்து இருக்கிறார். முதலில் கிராபிக்ஸ் வேலைகள் எதும் முடியாத நிலையில் பார்த்தவர், பின்னர் முழுமையான நிலையில் சிறப்பு ப்ரிவ்யூ ஷோவில் கண்டார். 

இந்த ஷோவில் ரஜினிகாந்த் குடும்பத்தினருடனும் கலந்துகொண்டார். தனுஷ், செல்வராகவன் ஆகியோரும் உடன் இருந்தனர். 

ஆடுகளத்தைப் பார்த்த ரஜினிகாந்த் "அருமையான படம். பக்கா கமர்ஷியல் படம். வெளிநாடு தரத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. தனுஷுன் நடிப்பை பார்த்தும், வெற்றிமாறனின் கதை மற்றும் இயக்கத்தை பார்த்து வியந்தேன். முள்ளும் மலரும் படம் எவ்வாறு என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதோ. அதை போல் தனுஷுக்கு இத்திரைப்படம் அமையும்" என்றார்.




1 comment:

  1. //ஆடுகளம் பார்த்து தனுஷின் நடிப்பை பாராட்டிய ரஜினி //

    ஓடாத படமா இருந்தாலும் பாராட்டித்தான் ஆகணும்

    ReplyDelete