Sunday, March 25, 2012

எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சின் நம்பிக்கை


சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர்.

இந்நிலையில் மும்பையில் இன்று நிருபர்களை சந்தித்த சச்சின், ‘சாதனைகள் என்பவை நிச்சயம் ஒரு நாள் முறியடிக்கப்படுபவை தான். ஆனால் எனது சாதனைகள் இந்தியர் ஒருவரால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் எனது சாதனை எப்போது முறியடிக்கப்பட்டாலும், நிச்சயம் இந்தியர் ஒருவராலேயே அது முறியடிக்கப்படும் என நான் நம்புகிறேன்என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஓய்வு பற்றி கருத்து கூறிய சச்சின், ‘நான் எப்போது ஓய்வு பெற வேண்டுமென்பதை நான்தான் முடிவு செய்வேன். ஏனெனில் நான் கிரிக்கெட் ஆட தொடங்கியது எனது சொந்த முடிவு தான்.  இப்போது என்னை ஓய்வு பெற சொல்பவர்கள் ஆரம்பத்தில் என்னை கிரிக்கெட் ஆட சொன்னவர்களும் இல்லை, என்னை அணியில் சேர்த்தவர்களும் இல்லை. மேலும் நாம் வலிமையான நிலையில் இருக்கும்போது நாட்டுக்காக தொடர்ந்து ஆடாமல், ஓய்வு பெற்றால் அது சுயநலமானது.என்றார்.


1 comment:

  1. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete