Wednesday, September 26, 2012

சூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி


மாற்றான், சாருலதா படங்களில் சூர்யாவும் பிரியாமணியும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடங்களில் நடித்துள்ளனர். இரு படங்களும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருக்கும் என பேசப்பட்டது. மாற்றானை முந்திக் கொண்டு சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது.

மாற்றான் படத்துடன் சாருலதா படத்தை ஒப்பிடவேண்டாம் என்று பிரியாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் வந்த முதல் இந்திய படம் என்ற பெருமை சாருலதாவுக்கு கிடைத்துள்ளது. இதில் நடித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். படத்துக்கு எடிட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. கதையும், கேரக்டரும் எனக்கு பிடித்து இருந்ததால் அதில் நடிக்க சம்மதித்தேன்.

சாரு மற்றும் லதா கேரக்டர்கள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. சூர்யாவின் மாற்றான் படத்துடன் எனது கேரக்டரை ஒப்பிட்டு பேச வேண்டாம். மாற்றான் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம். மாற்றான் படம் சாருலதா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

ரத்த சரித்திரம் படத்துக்கு பின் எனக்கு நிறைய கேரக்டர்கள் வந்தன. அவற்றில் திருப்தி இல்லை. சாருலதா படம் அந்த குறையை போக்கி உள்ளது. எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருக்கும்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.


1 comment: