Saturday, October 6, 2012

கனடா நாட்டில் இளையராஜாவை எதிர்த்து போராட்டம்

கனடாவில் நவம்பர் 3-ந்தேதி இளைய ராஜாவின் இசை கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளைய ராஜா கனடா சென்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இளையராஜா நேற்று பகல் 11 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் போட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று ஹாலுக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



2 comments:

  1. அதான் உண்மை தெரியுமே...கனடாவில உள்ள விடுதலைப் புலிகள் ராஜாகிட்ட மெரட்டி பணம் கேட்டாங்க அவரு முடியாதுன்னுடாரு...அதுனாலதான் ராஜாவை எதிர்த்துப் போராட்டம்...இதுல சீமான்னு பெயர் வச்சிருக்கிற இந்த சைமன் பய நடுவுல தனக்கு ஏதாச்சும் எலும்பு கெடைக்குதான்னு பாக்குறான்...அதான் உண்மை....இந்த சம்பவம் நிச்சயமாக தமிழ் நாட்டுல உள்ள புலி ஆதரவாளர்களைப் பாதிக்கும்

    ReplyDelete