Wednesday, November 17, 2010

12 வயதுக்குள் 12 கொலைகள் குரல்வளை அறுப்பதில் கொடூரன்




 மெக்சிகோ நாட்டில் கூலிப்படை ரவுடியாக செயல்பட்ட 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். குரல்வளையை அறுத்தும் மர்ம உறுப்பை வெட்டியும் 12 பேரை அவன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மட்டுமல்ல, கடத்தல் கும்பல் இடையே மோதலும் பரஸ்பரம் சுட்டுக்கொண்டு சாவதும் சகஜம். 

மோர்லாஸ் மாநிலத்தில் செயல்படும் தென் பசிபிக் போதை கும்பல் பற்றிய வீடியோ காட்சி சமீபத்தில் யூ&டியூப் இணையதளத்தில் வெளியானது. அதன் அடிப்படையில் போதை மருந்து கும்பல் செயல்படும் வீட்டை ராணுவத்தினர் உடனே கண்டுபிடித்தனர். 6 பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவன் 12 வயது சிறுவன் என்பது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

தொழில் ரீதியான எதிரிகளை கொலை செய்வதற்காக அவனை போதை கும்பல் நியமித்திருந்தது. அவன் பெயர் எல் போஞ்சிஸ். இதுவரை 12 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளான். சிறுவன் என்பதால் யாருக்கும் சந்தேகம் வராது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிரியை நெருங்கும் சிறுவன் அவர்கள் அசந்த நேரத்தில் கழுத்தையும் மர்ம உறுப்பையும் அறுத்துவிட்டு தப்பிவிடுவான். ஒரு கொலைக்கு ரூ.13 ஆயிரம் வாங்கியிருக்கிறான் என்று தெரியவந்தது.

இதற்கு அவனது சகோதரிகளும் உடந்தை. அவன் கொலை செய்ததும் உடல்களை சகோதரிகள்தான் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். இதுபோல பல சிறுவர்கள் கூலிப்படையாக பயன்படுத்தப்படுகிறார்களா என்று விசாரணை நடக்கிறது. ‘‘பொம்மை துப்பாக்கி வைத்து விளையாடும் வயதில் நிஜ துப்பாக்கியை கொடுத்து கூலிப்படையாக களமிறக்கியிருப்பது மிகவும் கொடூரமானது’’ என்று கூறியிருக்கின்றனர் மெக்சிகோ போலீஸ் அதிகாரிகள்.




ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ... 

No comments:

Post a Comment