Thursday, November 25, 2010

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் வென்று 7-வது இடத்தை பிடித்தது (சுட சுட செய்திகள்)


16-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில்  இன்று மட்டும் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று காலை இந்தியாவின் சார்பில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பிரிவில் ஜோசப் ஆப்ரஹாமும்(46.96SB)வென்று சாதனை படைத்தார் 


பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பிரிவில் அஷ்வினியும்(56.15PB)2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.  

சற்று முன் நடந்த  குத்துச்சண்டை 60kg பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் தங்கம் வென்றார். இந்தியாவுக்கு இது 10-வது தங்கப்பதக்கம்.
சீன வீரர் ஹூ ஜிங்கை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி விகாஸ் கிருஷ்ணன் இந்த தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்தியாவுக்கு இதுவரை 10 தங்கப் பதக்கங்கள், 13 வெள்ளிப் பதக்கங்கள், 29 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 52 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்தப் பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.


 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .




No comments:

Post a Comment