Wednesday, December 15, 2010

என் வளர்ச்சிக்கு உதவிய 17 பேர்! - கமல்



என் வெற்றியில் கணிசமான பங்கு மற்றவர்களுக்கும் உள்ளது. நான் இந்த நிலைக்கு வர ஒவ்வொரு படத்திலும் 17 பேர் காரணமாக இருந்துள்ளனர், என்றார் கமல்.

கமல், திரிஷா ஜோடியாக நடித்த மன்மதன் அம்பு படம் இம்மாத இறுதியில் ரிலீசாகிறது. தெலுங்கில் மன்மத பானம் என்ற பெயரில் வருகிறது.

தணிக்கை அதிகாரிகளிடம் யு சான்றிதழ் வாங்கியுள்ளது இந்தப் படம்.

மன்மத பாணத்தின் தெலுங்கு பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. கமல், மாதவன், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டனர்.

விழாவில் கமல் பேசுகையில், "இந்த கமல் எடுத்தவுடன் ஹீரோவாக வாழ்க்கையைத் துவங்கவில்லை. ஒரு உதவி டான்ஸ் மாஸ்டராகத்தான் சினிமா வாழ்க்கையைத் துவங்கினேன். இதே ஹைதராபாத்தில் 'வாழ்க்கை ரொம்ப சின்னது. அதை விட சின்னது இளமை...' என்ற பாடல் காட்சி எடுக்கப்பட்டது. அதில் நான் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன். பிறகுதான் நடிகராகி இந்த அளவுக்கு உயர்ந்தேன்.

எனது வளர்ச்சிக்கு நான் மட்டும் காரணம் அல்ல. இதற்கு பின்னால் நிறைய நிபுணத்துவம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். நான் பெரிய நடிகராக இருக்கிறேன். நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் அதன் வெற்றிக்கு 17 பேர் முக்கியமாக இருந்துள்ளனர். அந்தந்த துறையின் நிபுணர்கள் அவர்கள்.

'மன்மதன் அம்பு' படத்தில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. ஒரு பாடலை நான் பாடி உள்ளேன். இந்த படத்தில் மாதவனும் சங்கீதாவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். த்ரிஷாவின் நடிப்பு இதில் பெரிதும் பேசப்படும், " என்றார்



ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

No comments:

Post a Comment