Friday, December 31, 2010

செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?



செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. இப்படத்தில் ஆரம்பத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் 40 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். செல்வராகவனிடமிருந்து பிரிந்து சென்ற யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் அவருடன் இணைந்துள¢ளார். இப்போது, 'இரண்டாம் உலக'த்தில் அவர்தான் இசையமைக்கிறார். படத்திலிருந்து விலகியது தொடர்பாக ஜி.வி. பிரகாஷ் குமார் கூறும்போது, "இப்படத்தில் என்னை நீக்கிவிட்டு, யுவனை தேர்வு செய்திருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. கால்ஷீட் பிரச்னை மற்றும் சம்பள விஷயம் காரணமாக நானே நட்புடன் விலகியிருக்கிறேன். எனக்கும் செல்வராகவனுக்கும் இடையே எந்த பிரச்னையும் கிடையாது"என்றார். அவர் மேலும் கூறும்போது, "இந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் பிப்ரவரி முதல் பணியாற்ற உள்ளேன்" என்றார்


No comments:

Post a Comment