Sunday, December 26, 2010

மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு



தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் வடிவேலு. தமிழில் காமெடியில் கலக்கிய இவர், மலையாளத்திலும் கலக்கப்போகிறார்.

பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்திற்கு போகும் திரையுலகினருக்கும் ஏப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்தவகையில் காமெடி நடிகர் வடிவேலுக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்நியன் , தசாவதாரம் உள்ளிட்ட மெகா பட்ஜட் படங்களை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், டைரக்டர் சுனில் இயக்கத்தில் லக்கி ஜோக்கர்ஸ் என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் பிரசன்னா நடிக்கிறார். இவருடன் இணைந்து காமெடியில் வடிவேலுவும் கலக்க இருக்கிறார். 

இயல்பாகவே காமெடி பண்ணும் வடிவேலுக்கு, தமிழ் மக்கள் ஆதரவு தந்தது போல், மலையாளத்திலும் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வடிவேலு. ஆல் தி பெஸ்ட் வடிவேல் சார்! 


No comments:

Post a Comment