கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கருணாகரன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.
சுவாசக் கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 10ம் தேதி அவர் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் அபாய கட்டத்தில் இருந்த கருணாகரனின் உடல் நிலையில் கடந்த வாரம் முன்னேற்றம் காணப்பட்டது.
இந் நிலையில் நேற்று முன் தினம் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசமும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
4 முறை கேரள முதல்வராக இருந்த அவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துளளார்.
No comments:
Post a Comment