Thursday, December 16, 2010

தேர்தல் ஸ்டன்ட் 'பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி' : உளவுத்துறை எச்சரிக்கை


தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இலங்கையில்ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டைகடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால்அந்த இயக்கம் வலுவிழந்து விட்டது.இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல்தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும்உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம்தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும் சில விளக்கங்களை மாநில காவல் துறை கேட்டது.இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை காவல் துறை உயர் அதிகாரிகள்மத்திய உளவுத்துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில்எத்தகைய திட்டத்துடன்எவ்வாறு அவர்கள் ஊடுருவியுள்ளனர் என்ற விவரங்களை மத்திய உளவுத்துறை விவரித்ததாகக் கூறப்படுகிறது.பிரதமர் மன்மோகன்சிங்,  உள்துறை அமைச்சர் சிதம்பரம்தமிழக முதல்வர் கருணாநிதியை குறி வைத்து இந்த கும்பல் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங்வரும் 3ம் தேதி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க  உள்ள நிலையில்இந்த எச்சரிக்கைகாவல் துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்துமுதல்வருக்கான பாதுகாப்பு நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில்சந்தேகப்படும் படியாக யாரும் நடமாடுகிறார்களா எனவும்பல ஆண்டுகளாக இருப்போரில் சந்தேகப்படும் வகையில் செயல்பட்டவர்கள் யார் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால் சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 ஊழலை மறைக்கவும் வரும் தேர்தலில் அனுதாபத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கவுமே இப்படி ஒரு புரளியை கிளப்பி விட தொடங்கி இருகிறார்கள். 
 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

No comments:

Post a Comment