Monday, December 27, 2010

படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!


மும்பை தாக்குதல் சம்பவ படத்தில் பிரியாமணி ஹீரோயினாக நடிக்கிறார். மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். இந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு கன்னடத்தில், ‘லட்சுமிஎன்ற பெயரில் படம் தயாராகிறது. இதில் சிவராஜ் குமார் ஹீரோ. ஹீரோயினாக பிரியாமணி நடிக்கிறார்.

இதன் ஷூட்டிங் பெரும்பகுதி வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான கிளிப்பிங்க்ஸ், தகவல்களை பட இயக்குனர் ராகவ் லோகி சேகரித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே ஜோகயாஎன்ற படத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். அதன் படபிடிப்பு முடிந்த கையோடு லட்சுமிஷூட்டிங்கில் பங்கேற்கிறார். பிரியாமணியுடன் நடிக்கும் பாடல் காட்சியுடன் வெளிநாட்டில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 




No comments:

Post a Comment