Saturday, January 29, 2011

பிரியங்கா சோப்ரா, காத்ரீனாவிடமிருந்து ரூ. 12 கோடி பறிமுதல்-வருமான வரித்துறை

நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் காத்ரீனா கைபின் வீடுகளில் நடந்த சோதனையில் ரூ. 12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை இந்த இரு நடிகைகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது பிரியங்காவுக்குச் சொந்தமாக மும்பையில் 11 வீடுகள் இருப்பதாக தெரிய வந்ததாக செய்திகள் கூறின. இருவரது வீடுகள் மட்டுமல்லாமல் அலுவலகங்கள், அவர்களது பி.ஏ.க்களின் வீடுகளிலும் கூட ரெய்டுகள் நடந்தன.

இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இருவரது வீடுகளிலும் நடந்த சோதனையின்போது ரூ. 12 கோடி பணம் சிக்கியது.

இதேபோல மற்ற நடிகர், நடிகைகளின் வீடுகளிலும் ரெய்டு நடக்க வாய்ப்புள்ளது என்றார்.


No comments:

Post a Comment