Tuesday, January 25, 2011

ஆஸ்கர்: 2 பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை





ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் (nominations) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் 2 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளார்.
டானி பாய்ல் இயக்கியுள்ள '127 ஹவர்ஸ்' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் பின்னணி இசைக்காகவும், அப்படத்தில் இடம்பெற்ற 'இஃப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக சிறந்த பாடலுக்கான பிரிவிலும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை ரஹ்மான் கைப்பற்றினால், இது அவர் இரண்டாவது முறையாக வெல்லும் ஆஸ்கர் விருதாகும்.

முன்னதாக, டானி பாய்லின் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2009-ல் அவர் இரண்டு ஆஸ்கர்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment