Tuesday, January 25, 2011

தமிழ் படங்களுக்கு முழுக்கா...? -அசின் பதில்


தமிழ் படங்களுக்கு முழுக்கு போடப் போவதாகவும், இந்திப் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் என்னைப் பற்றி வதந்திகள் பரவுகின்றன.

தமிழில் நான் நடித்த கஜினி படத்தை இந்தியில் எடுத்ததால் எனக்கு அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களை அங்கு முடித்துள்ளேன். இடையில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடிக்க அழைத்ததால் மீண்டும் தமிழுக்கு வந்தேன்.

இதில் எனக்கு வித்தியாசமான கேரக்டர் அமைந்தது. இது எனக்கு முக்கியமான படம். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். பணம், மொழி முக்கியமல்ல. கதை பிடித்து இருந்தால் நடிப்பேன்.

தமிழ் பட உலகை என்னால் மறக்க முடியாது. இங்கு இருந்துதான் நடிகையாக உயர்ந்தேன். நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் எனக்கு பிடிக்கும். இந்தியில் ரெடிபடத்தில் தற்போது நடித்து வருகிறேன்.

இப்படம் மே மாதம் ரிலீசாகும்.

No comments:

Post a Comment