Thursday, January 27, 2011

'சிம்பு'வுடன் இணையும் தனுஷ்!


 தனுஷ் அடுத்தடுத்து கைநிறைய படங்களுடன் மிக பிஸியாக உள்ளார் நடிகர் தனுஷ்.
இந்த நிலையில் தனது அடுத்த வெளியீடாக ரஜினி பட ரீமேக்கான 'மாப்பிள்ளையைக் களமிறக்கத் தயாராகிறார் தனுஷ். இதுவும் சன் பிக்சர்ஸ் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஹரியின் வேங்கை, சுப்பிரமணியன் சிவாவின் சீடன், செல்வராகவனின் இரண்டாம் உலகம் என வரிசையாக உள்ளன தனுஷ் படங்கள்.

இதற்கிடையே, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் தந்த சிம்பு தேவனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தனுஷ். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போல இந்தப் படமும் பேண்டஸி கதைதானாம். இந்தப் படத்தைத் தயாரிக்க இரு பெரிய நிறுவனங்கள் முன்வந்துள்ளனவாம்.

இன்னொரு பக்கம், வெற்றி மாறன் 2012-ல் தயாரிக்கும் படத்திலும் தனுஷ் நடிக்கிறாராம்.

No comments:

Post a Comment