Thursday, January 27, 2011

நித்யானந்தா ஆசிரமத்தில் ரஞ்சிதாவுக்கு புதிய பதவி

நடிகை ரஞ்சிதா நித்யானந்தா ஆசிரமத்தில் மீண்டும் நெருக்கமாகியுள்ளார். டி.வி.யில் ஆபாச படம் வெளியானதும் நித்யானந்தாவுக்கு எதிராக அவரை திருப்ப முயற்சிகள் நடந்தன. நித்யானந்தா பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் பெற போலீஸ் தீவிரம் காட்டியது. ஆனால் ரஞ்சிதா தலைமறைவாக இருந்ததால் அது ஈடேறவில்லை.

அவர் நித்யானந்தாவுக்கு ஆதரவாக இருக்கிறாரா எதிராக உள்ளாரா என்பதில் மர்மம் நீடித்தது. இந்த நிலையில் திடீரென்று கோர்ட்டில் ஆஜராகி வீடியோ படம் போலியானது என்று அதை வெளியிட்ட லெனின் கருப்பன் மீது வழக்கு தொடர்ந்து நித்யானந்தா பக்கம் இருப்பதை உறுதி செய்தார்.

அதன்பிறகு பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்துக்கு அதிரடியாக சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு காத்திருந்தது. சக சீடர்கள் முன்பை விட அன்பாக பழகினார்கள். நித்யானந்தாவின் பாத பூஜை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அவரது கால்களை கழுவி பாத பூஜை செய்து நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பதை காட்டிக் கொண்டார்.

நித்யானந்தா பக்தையாக நீடிப்பேன் என்றும் அவர் ஆசியை தொடர்ந்து பெறுவேன் என்றும் அறிவித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஆசிரம சீடர்களுடன் ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். வயதான பெண்ணுக்கு இலவச சேலைகளை வழங்கினார். ஆசிரம பணிகளில் முன்பை விட தீவிரமாக ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதாவுக்கு நித்யானந்தா ஆசிரமத்தில் முதன்மை சீடர் பதவி வழங்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று "நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா" என்ற தலைப்பில் 'விழியே பேசு...' 
செய்தி வெளியிட்டு இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் அதை நிஜமாக்குவது போன்று இந்த பதவி ரஞ்சிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


அந்த செய்தியை படிக்க ...
நித்யானந்தாவின் வாரிசாகிறார் ரஞ்சிதா



1 comment:

  1. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete