Friday, January 14, 2011

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை!



'ஊதாரி' படப்பிடிப்பில் நடிகை விஷ்ணுப்ரியா மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு, ஊதாரி என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார். சக்தி கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். இந்த படத்தில், வினோத்-விஷ்ணுப்ரியா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.

விஷ்ணுப்ரியா, மலையாள நடிகை. ஏற்கனவே 4 மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். நயன்தாரா, அசின் போன்றவர்களை விமர்சித்து பேட்டி கொடுத்து பரபரப்பேற்படுத்தி வருகிறார்.

நேற்று ஊதாரி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நடிகை விஷ்ணுப்ரியா திடீர் என்று மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார்.

விஷ்ணுப்ரியாவை பரிசோதித்த அவர், "சாதாரண மயக்கம்தான். சரியாக சாப்பிடாமல் இருந்ததால் வந்த மயக்கம்தான்'' என்று கூறி, நடிகையை தெளியவைத்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.


No comments:

Post a Comment