Monday, January 31, 2011

'சீடன் என் படமல்ல!' - தனுஷ்

விளம்பரங்களில் தனுஷ் சிறப்பான தோற்றத்தில் நடிக்கும் (சிறப்புத் தோற்றம் அல்ல!) சீடன் என்று போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாலோ என்னமோ... திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

சீடன் என் படம் அல்ல. நான் அதில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளேன் அவ்வளவுதான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு தனுஷ் படம் என்பது போலவே ஆரம்பத்திலிருந்து விளம்பரம் கொடுத்து வந்தார்கள்.

ஆனால் உஷாராகிவிட்ட தனுஷ் தனது அறிக்கையில், "சீடன் படத்தில் வெறும் 25 நிமிடங்கள் நான் வருகிறேன். அனன்யாவின் வேலைக்காரன் பாத்திரம். எளிமையான ரோல். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எனது பங்கு இவ்வளவுதான். படத்தின் கிளைமாக்ஸ் சிறப்பாக வந்துள்ளது. ஒவ்வொரு ரசிகருக்கும் இந்தப் படம் பிடிக்கும்..." என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் ரீமேக்தான் இந்த சீடன். ஹீரோவாக கிருஷ்ணாவும், நாயகியாக அனன்யாவும் நடித்துள்ளனர்.


No comments:

Post a Comment