Saturday, January 1, 2011

சினேகாவின் ஆசை!


நடிகை சினேகாவிற்கு ஒரு சின்ன ஆசை!  அது என்ன? என்பதை அவரே சொல்கிறார், கேளுங்கள்.

""சரத்குமாருடன் "விடியல்', பிரசாந்துடன் "பொன்னர் சங்கர்', தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு படம் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். பத்து வருடங்களாக நல்ல படங்களில், நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். எனக்குப் பிடித்த நடிகர்களில் கமல்ஹாசன் ரொம்பவும் குறிப்பிடத்தக்கவர். நடிகைகளில் ராதிகாவை ரொம்பப் பிடிக்கும். ரஜினி ஸாரின் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பது எனக்குத் தெரியவில்லை.

நிறைய பேர், ""உங்களுக்கு  எப்போது திருமணம்?'' என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு எனக்கு நடிப்பில் மட்டும்தான் ஆர்வம். திருமணம் அதற்கான நேரம் வரும்போது நடக்கும். அது காதல் திருமணமா, அல்லது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணமா என்பதை இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது'' என்கிறார்.



No comments:

Post a Comment