Tuesday, February 1, 2011

கன்னடத்தில் நடிக்கவில்லை: ரஜினி


கன்னடத்தில் உபேந்திரா, இயக்கி நடித்து ஹிட்டான படம் சூப்பர்’. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரத்யேக காட்சி பெங்களூரில் கடந்த வெள்ளியன்று ரஜினிக்காக திரையிடப்பட்டது. ரஜினியுடன் அவரது நண்பர்களும் படத்தை பார்த்தனர். படம் முடிந்ததும் உபேந்திராவை கட்டித்தழுவி பாராட்டிய ரஜினி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: வழக்கமாக உபேந்திரா நடிக்கும் படங்கள் எனக்குப் பிடிக்கும். இந்தப்படம் அதுக்கு விதிவிலக்கல்ல. உபேந்திரா சிறந்த நடிகர் மட்டுமில்ல. இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் சிறப்பானது. இந்த மாதிரியான படங்கள் அதிகம் வரவேண்டும். கன்னடத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நல்ல கதையும் அதற்கான வாய்ப்பும் கிடைத்தால் எதிர்காலத்தில் நடிப்பேன். இப்போது எந்த கன்னடப்படத்திலும் நடிக்க வில்லை. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

No comments:

Post a Comment