Friday, February 25, 2011

எனக்கு பிடித்த நாட்கள்


69 பிலிம்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதியபடம் எனக்கு பிடித்த நாட்கள்”. இப்படத்துக்கு கே. பன்னீர்ச்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே தொ(ல்)லைபேசி படத்தை டைரக்டு செய்தவர். நாயகனாக நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பி பயிற்சி பெற்ற கேஸ்ட்ரோ நடிக்கிறார். நாயகியாக ஜெயதி நடிக்கிறார்.

மகேஷ்வர், ஜான்ஸன், சிவதாஸ், கிளாமர் மாலி ஆகியோரும் அறிமுகமாகின்றனர். மேலும் நான்கு புதுமுக நாயகர்களுக்கான தேர்வு நடக்கிறது. காலேஜ் முடித்து வெளியில் வரும் நண்பர்கள் சில நாட்களை சந்தோஷமாக கழிக்க ஊர் சுற்றுகின்றனர்.

அவர்கள் மத்தியில் நாயகி குறுக்கிட்டு வில்லத்தனம் செய்கிறார். இதனால் ஒவ் வொரு நாளும் பிடிக்காத நாட்களாகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை.

ஒளிப்பதிவு: சீனு ஆதித்யா, இசை: ஜி.எஸ். ஷாந்தன், எடிட்டிங்: மகாவிஷ்ணு, பாடல்: நா. முத்துக்குமார், அண்ணாமலை, நந்தலாலா நடனம்: எஸ்.எல். பாலாஜி, சதீஷ், சண்டைப்பயிற்சி: பவர் பாஸ்ட், தயாரிப்பு: எஸ். சிவம், எச். லியாகத், தயாரிப்பு நிர்வாகம்: பாலா.


No comments:

Post a Comment