Friday, February 25, 2011

உலக்கோப்பை கிரிக்கெட்டும் தமிழ் சினிமா உலகமும்

கிரிக்கெட் திருவிழா தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், தமிழ் திரையுலகம் கதி கலங்கியுள்ளது. லீக் ஆட்டம் நடக்கும் போது திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன. இனி வரவிருக்கும் கால் இறுதி  மற்றும் அரை இறுதி ஆட்டத்திற்குள் என்ன நடக்குமோ என அதிர்ச்சியில் திரையுலகம் மிதந்து வருகிறது. தற்போது வெளி வந்திருக்கும் படங்களான, பயணம், யுத்தம் செய் போன்றவற்றுக்குக் கூட பகல் காட்சிக்கு 50 பேர் வருவதே அதிசயமாகிவிட்டதாம். குறிப்பாக பகலிரவு ஆட்டம் என்றால் திரையரங்கு எல்லாம் காத்து வாங்குகிறதாம். இந்த நிலையை எதிர்ப்பார்த்தே, 7 முக்கியப் படங்களின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 8-க்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைகின்றன. பாலாவின் அவன் இவன் கூட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஏப்ரல் 8-ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்படுகிறது



No comments:

Post a Comment