Tuesday, February 1, 2011

“ஜேம்ஸ்பாண்டு” படங்களின் இசையமைப்பாளர் மரணம்


பிரபல ஆங்கில பட இசையமைப்பாளர் ஜான்பார்ரி (77). இவர் உலகப் புகழ் பெற்ற 11 ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 30-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் அவர் மரணம் அடைந்தார்.

மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிகிறது. முதலில் கடந்த 1963-ம் ஆண்டு வெளியான ருஷ்யா வித் லவ்என்ற ஜேம்ஸ்பாண்டு படத்துக்கு இசை அமைத்தார்.அதைத் தொடர்ந்து 11 ஜேம்ஸ்பாண்டு படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து சாதனை படைத்தார்.

இவர் தனது மனைவி லாராவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்தார். இவருக்கு 4 குழந்தைகளும், 5 பேரக்குழந்தைகளும் உள்ளனர். டான்ஸ் வித் வால்வ்ஸ்படத்துக்கு அகாடமி விருதுகளும், “அவுட் ஆப் ஆப்பிரிக்கர்” “தி லயன் இன் வின்டர்ஆகிய 2 படங்களுக்கு பார்ன் பிரீவிருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு ஆலி வுட்டின் இசையமைப்பாளர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment