Saturday, February 26, 2011

ஜெனிலியா போட்ட சண்டை!

உருமி படத்தில் ஜெனிலியாவின் தோற்றமும் நடிப்பும் தன்னை அசத்தி விட்டதாக பாராட்டியுள்ளார் படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவன்.

பிரபு தேவா, பிருத்விராஜ், தபு, ஜெனிலியா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் உருமி. இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒரு நிமிடமே வரும் இந்த முன்னோட்டக் காட்சியிலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார் படத்தின் நாயகி ஜெனிலியா.

இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ் சிவன் கூறுகையில், "ஜெனிலியா இந்தப் படத்தில் இளவரசியாக வருகிறார். 16-ம் நூற்றாண்டுக் கதை இது. படத்தில் ஒரு வாள் சண்டை இடம்பெறுகிறது. இந்த சண்டைக் காட்சியில் டூப் போடாமல் ஜெனிலியாவே நடித்துள்ளார். பிருத்விக்கு ஜோடியாக நடித்துள்ள ஜெனிலியா, இந்தப் படத்தில் புதிய சிகரத்துக்குப் போவார்" என்றார்.

இந்தப் படத்துக்காக நிஜமாகவே கேரளாவின் களரிச் சண்டைக் கற்றுக் கொண்டாராம் ஜெனிலியா.


No comments:

Post a Comment