Monday, February 28, 2011

மயங்கி விழுந்தார் சமீரா பிரபுதேவா ஷூட்டிங் கேன்சல்


ஷூட்டிங்கில் சமீரா ரெட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடிக்கும் படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் ஷூட்டிங் நடந்தபோது, சமீரா திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றனர்.

சிகிச்சை அளித்த டாக்டர்கள், அதிகமான காய்ச்சல் இருப்பதால் ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து ஷூட்டிங் கேன்சல் ஆனது. இதுபற்றி சமீரா தரப்பில் விசாரித்தபோது, ‘இந்தி, தெலுங்கு படங்களிலும் சமீரா நடித்து வருகிறார். அதோடு கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து நடித்துவருவதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதுஎன்றனர்.


No comments:

Post a Comment