Wednesday, February 23, 2011

நாசமாக்கப்பட்ட பார்வதியம்மாள் அஸ்தி... சிங்கள நாய்களின் வக்கிரச் செயல்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் மூன்று நாய்களை சுட்டுப் போட்டதுடன், அவரது அஸ்தியையும் தாறுமாறாக அள்ளி வீசியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை தமிழ் இணையதளங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நேற்று மாலை பார்வதியம்மாளின் உடல் அஞ்சலி நிகழ்வுக்குப் பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை மயானத்துக்குச் சென்று அஸ்தியை சேகரித்த முயன்றபோதுதான் அங்கு அஸ்தி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது தெரிந்தது.

மேலும், பார்வதியம்மா உடல் எரிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டும் இருந்தது.

சிங்களப் படைகளே இந்த கேவலமான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அந்தப் பகுதியினர் அச்சத்துடன் தெரிவித்தனர். நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் பார்வதியம்மாளின் இறுதிக் கிரியைகளை நடத்திய ஐயர் யார்? என சிங்களத்தில் மிரட்டும் தொனியில் விசாரித்ததாகவும் கூறினர்.
கொலை செய்த பெண்ணின் சடலத்தையே காம வெறியோடு விளையாடிய சிங்களர்களின் காம வெறியை கைகட்டி (கைதட்டி)ரசித்த உலகம். இந்த இரக்கமற்ற மனிதாபமற்ற செயலையும் சந்தோசத்தோடு செய்தவர்களை தட்டி கொடுக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.....!!!

No comments:

Post a Comment