Sunday, February 27, 2011

வித்யாபாலனிடம் உருகிய பிரபுதேவா டென்ஷனில் நயன்தாரா?

உருமி படத்தில் வித்யாபாலனும், பிரபுதேவாவும் இணைந்து செய்துள்ள காதல் காட்சிகள் படு கவர்ச்சிகரமாகவும், சிலிர்க்க வைக்கும் வகையிலும் வந்துள்ளதாம்.

மலையாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம் உருமி. இப்படத்தை, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்குகிறார் சந்தோஷ் சிவன். இப்படத்தில் மலையாளத்தைச் சேர்ந்த பிருத்விராஜ், தமிழைச் சேர்ந்த பிரபுதேவா, இந்தியைச் சேர்ந்த தபு, ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் முழுக்க சீரியஸான விஷயங்கள் நிறைய இருந்தாலும் சிலிர்க்க வைக்கும் கவர்ச்சியும், சிலாகிக்க வைக்கும் காமெடியும் நிறையவே இருக்கிறதாம்.

போர்த்துகீசிய இளவரசியாக வருகிறாராம் ஜெனிலியா. இதற்காக வாள் சண்டையெல்லாம் போட்டுள்ளாராம். அதேபோல தபுவின் படு கவர்ச்சியான டான்ஸும் படத்தில் இருக்கிறதாம். ரசிகர்களை இந்த டான்ஸும், தபுவின் கவர்ச்சியும் வெகுவாக கவரும் என்கிறார் சிவன்.

இதை விடமுக்கியமாக வித்யா பாலன், பிரபுதேவா இடம் பெறும் காட்சிகளை அவர் கூறியுள்ளார். இவர்கள் இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சிகளைப் பார்த்து நயனதாராவே டென்ஷனாகக் கூடும் என்று சிரித்தபடி கூறுகிறார் சிவன்.

அப்படியானால் ரசிகர்கள் படத்தைப் பார்த்து எமோஷனலாகப் போவது நிச்சயம்.



No comments:

Post a Comment