Tuesday, March 29, 2011

தொகுதிக்கு 10 கோடி செலவிட ஜெ. தயாராகி விட்டார்-கருணாநிதி

ஒரு தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை செலவிட ஜெயலலிதா தயாராகி விட்டார். எனவே பணம் கொடுக்க வருவோரை பிடித்துக் கொடுக்க திமுக கூட்டணியினர் ஆயத்தமாக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பணத்தைக் கொட்டியாவது இத்தேர்தலில் வென்று விட வேண்டும் என்று அதிமுகவினர் நினைக்கிறார்கள்.

ஒரு தொகுதிக்கு ரூ. 10 கோடி வரை பணத்தை செலவிட ஜெயலலிதா தயாராகி விட்டார். அம்மையார் கும்பல் ஆட்களை அடையாளம் யாரும் தவறி விடக் கூடாது. பணத்தை வைத்து வாக்குகளை விலை பேச வருவோரைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது நமது கடமை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தொகுதிக்கு ரூ. 10 கோடி செலவிட ஜெயலலிதாவும், அதிமுகவும் தயாராகி விட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment