அதி நவீன கார்களின் காதலர்களில் நடிகர் கமல்ஹாஸனும் ஒருவர். அதுவும் புதிய கார்களில் புதிய வசதிகளைச் செய்து பயன்படுத்துவது அவருக்கு ரொம்பவே பிடிக்கும்.
இப்போது புதிதாக அவர் ஒரு ஆடி ஏ 8 எல் (Audi A8L) செடான் வகை காரை வாங்கியுள்ளார்.
வெள்ளை நிறத்தில் இந்தக் கார் சிக்னல்களைக் கடக்கும்போது, அதைப் பார்க்காத கண்களே இருக்காது எனும் அளவுக்கு அத்தனை வசீகரமான கார் இது.
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல ஹை டெக் பாதுகாப்பு வசதியுடன் கூடிய இந்தக் காரின் விலை கோடிக்கும் அதிகம். ஏதாவது தாக்குதல் அல்லது விபத்து நேர்ந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பைத் தருகிறது இந்தக் கார்.

No comments:
Post a Comment