Thursday, March 31, 2011

கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்தித்த தேர்தல்களும்


தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 2,773 பேர் போட்டியிடுகிறார்கள். திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கலைஞர் உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.


1.மு.கருணாநிதி (தி.மு.க.)
2.குடவாசல் எம்.ராஜேந்திரன் (அ.தி.மு.க.)

3.ஆர்.பிங்களன் (பா.ஜ.க.)

4.தை.ஜெயராமன் (பகுஜன் சமாஜ் கட்சி)

5.ஆர்.ரமேஷ்குமார் (இந்திய ஜனநாயக கட்சி)

6.சிவஇளங்கோ (மக்கள் சக்தி கட்சி)

7.தி.அன்பழகன் (சுயே.)

8.ச.ஆனந்தராஜ் (சுயே.)

9.ராமசாமி என்ற டிராபிக் ராமசாமி (சுயே.)

10.ம.தூதைசெல்வம் (சுயே.)

11.ச.முத்தரசன் (சுயே.)

12.பொ.ஸ்ரீராமச்சந்திரன் (சுயே.)


திமுக துவங்கிய பின், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய கலைஞர், இதுவரை 11 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஐந்து முறை தமிழகத்தையே ஆண்டாலும், சொந்த தொகுதியில் இதுவரை போட்டியிட்டதில்லை.


அந்தக் குறையைப் போக்கும் விதமாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் போட்டியிடுகிறார்.


1957ஆம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்ட கலைஞர், 8,296 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1962ஆம் ஆண்டு தஞ்சாவூரில் போட்டியிட்ட கலைஞர், 1,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1967ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கலைஞர், 20,482 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1971ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் போட்டியிட்ட கலைஞர், 12,511 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1977ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட கலைஞர், 16,438 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1980ஆம் ஆண்டு அண்ணாநகரில் போட்டியிட்ட கலைஞர், 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1989ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்ட கலைஞர், 31,991 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1991ஆம் ஆண்டு துறைமுகத்தில் போட்டியிட்ட கலைஞர், 890 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


1996ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், 35,784 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


2001ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், 4,834 ஓட்டு வித்தியாசத்தல் வெற்றி பெற்றார்.


2006ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், 8,526 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கலைஞர் போட்டியிடவில்லை.


No comments:

Post a Comment