Tuesday, March 29, 2011

விஜயகாந்த் பிரச்சாரத்தை ஏற்பார்களா? கனிமொழி பதில்


திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல் அமைச்சருமான கருணாநிதியை ஆதரித்து, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


கேள்வி: விஜயகாந்த் பிரச்சாரத்தை மக்கள் ஏற்பார்களா?


பதில்: வேறு எந்த கூட்டணியும் தனக்கு தேவையில்லை. மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதிமுக கூட்டணி பற்றி ஒருமுறை


கேட்டபோது, எனக்கு நிழலுக்கு மாலையிட விருப்பமில்லை என்று சொன்னார். அப்படியெல்லாம் பேசிவிட்டு இன்று அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பஞ்சமி நிலங்களை மீட்கப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறிவருவது வேடிக்கையானது என்றார்.


No comments:

Post a Comment