நண்பன் படத்துக்காக ஒரு நாளைக்கு ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 3 இடியட்ஸ் படத்தின் ரீ-மேக்கான நண்பன் படத்தில் நடிகர்கள் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே இடம்பெறுகிறார்கள். இவர்களின் ஸ்ரீகாந்தின் வேடம் கல்லூரி மாணவன் வேடமாம். இதற்காக உடலை குறைத்து, மாணவன் தோற்றத்துக்கு மாற வேண்டும் என்று டைரக்டர் ஷங்கர், ஸ்ரீகாந்துக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
இதையடுத்து தற்போது நாளொன்றுக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். சாப்பிடாமல் பட்டினி கிடப்பதற்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாக கூறும் ஸ்ரீகாந்த், சினிமாதான் என் வாழ்க்கை என்றாகி விட்டது. அதற்காக ஒரு வேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் தவறில்லை. படம் நன்றாக வர வேண்டும். ஸ்ரீகாந்த் நன்றாக நடித்திருக்கிறான் என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும். அதற்காக எதுவும் செய்ய தயாராக இருப்பதுதான் ஒரு நடிகனுக்கு அழகு. அதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன், என்கிறார்.
இன்றைய பதிவுகள் ...
- சந்தன கடத்தல் வீரப்பனாகிறார் கிஷோர்
- மகளிர் தினத்தை கிண்டல் செய்யும் பிரபல நடிகர்
- பாடல் வெளியீட்டு விழாவில் ஜெ.!விஜய் தந்தையின் தந்த...
- 3000 ஆண்டுகளுக்கு முந்தைய காதல்!!
- நடிகைகளுக்கும் குடும்பங்கள் உள்ளது - திரிஷா
- சட்டசபை தேர்தலில் கருணாநிதி போட்டியிடமாட்டார்?
- இமேஜை கெடுக்க முயற்சி :சுனேனா
- அறிமுக ஹீரோவுக்கு அனுஷ்கா, தமன்னா ஜோடி!
- மியூசிக் வீடியோ மூலம் இந்தியில் முன்னோட்டமிடும் சி...
- ரகுமான் தந்தைக்கு இளையராஜா புகழாரம்!
- உதவியை நாடும் கே.வி.ஆனந்த்
- பல்கலைக்கழக விழா: மாணவிகள் நிர்வாண நடனம்

No comments:
Post a Comment