சூர்யா நடித்து வரும் ஏழாம் அறிவு படத்தில் 1000 பேர் நடனமாடும் ஒரு பாடல் இடம் பெற இருக்கிறது.
கமல் நடித்த மன்மதன் அம்பு படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வரும் படம் ஏழாம் அறிவு. இதில் சூர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் கலைஞனாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாது இந்த கதாபாத்திரத்திற்காக சர்க்கஸ் சாகசங்களை எல்லாம் கற்றுக் கொண்டார்.
சமீபத்தில் எந்த திரைப்படத்திலும் 1000 பேர் நடனமாடும் ஒரு பாடல் காட்சி வந்தது இல்லை. இதனை முறியடிக்கும் விதமாக இப்பாடல் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
இது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் தனது டிவிட்டர் இணையத்தில் " ஏழாம் அறிவு படத்திற்கு 1000 பேர் பங்கேற்கும் ஒரு பாடலுக்கு ரெக்காடிங் ஆரம்பித்து விட்டேன்" என தெரிவித்துள்ளார்.
மார்ச் 28ம் தேதி நடைபெற இருக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூர்யா தான் கற்ற சர்க்கஸ் பயிற்சியை அனைவரின் முன்பு செய்து காட்ட திட்டம் வைத்து இருக்கிறதாம் படக்குழு. ஏழாம் அறிவை ஆகஸ்ட மாதம் வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

ஜப்பான் சுனாமி நேரடி படங்கள்
ReplyDeletehttp://www.spicx.com/2011/03/japan-tsunami-live-photos.html#axzz1GIkYZJ00