Tuesday, March 29, 2011

அஜீத் ஆதரவு யாருக்கு?


சைதை துரைசாமி இல்லத்திருமணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வந்திருந்தார்.  அப்போது அஜீத்தும் அவரது மனைவி சாலினியும்  ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றனர்.   ஜெயலலிதா அவர்களை நலம் விசாரித்தார்.


பின்னர் அதிமுகவில் சேரப்போகிறார் அஜீத் என்று பரபரப்பாக பேசப்பட்டது.   அதன்பிறகு எந்த தகவலும் இல்லை.  


 நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விஜய்யின் நண்பர் அஜீத்தின் நிலை என்ன என்ற கேள்விக்கு அஜீத் வட்டாரம் வாய் திறந்துள்ளது.

’’அஜீத் ஆதரவு யாருக்குஎன்ற கேள்விக்கே இடமில்லை.   அவர் வழக்கம்போலவே  இந்த தேர்தலிலும் எந்தவிதமான யாருக்கும் வாய்சு கொடுக்கப் போவதில்லை. அவர் தற்போது மங்காத்தா சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

தேர்தலுக்கு முந்தைய தினம் வரை மும்பையில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், தேர்தல் தினத்தில் சென்னை வந்து ஜனநாயக கடமையான ஓட்டு போடுவார். அவ்வளவுதான்.  அஜீத் ஓட்டு யாருக்கு? என்று அவர் வெளிப்படையாக தெரிவிக்க மாட்டார்’’ என்று தெரிவித்துள்ளது அஜீத் வட்டாரம்.





No comments:

Post a Comment