மார்ச் 8 உலக மகளிர் தினம். பெண்ணடிமைத்தனம் என்ற விலங்கை உடைத்து அச்சத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறோம் என்பதை ஒவ்வொரு பெண்களும் எண்ணி மகிழும் தினமாகவும், இன்னும் மிச்சமிருக்கிற அடிமைத்தனத்தை வேறோடு அறுக்கும் தினமாகவும் எண்ணி ஆரவாரமாக கொண்டாடினர் பெண்கள்.
நேற்று மட்டும் சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் என்று அமர்க்களப்பட்டது நாடு. ஆனால் தனது ட்விட்டர் இணையதளத்தில் இந்த மகளிர் தினத்தை தனக்கேயுரிய பாணியில் கிண்டலடித்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் பிரேம்ஜி அமரன்.
ஏன் இந்த தேதியை மட்டும் மகளிர் தினமாக கொண்டாட வேண்டும்? எல்லா தினங்களையும் கொண்டாடலாமே. இப்போதுதான் புதன் கிழமைகளில் 'பப்'களில் அவர்களை இலவசமாக அனுமதிக்கிறார்களே? என்று சகட்டு மேனிக்கு கிண்டல் செய்திருக்கிறார் அவர்.
இதற்கு பெண்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்களோ?

No comments:
Post a Comment