Wednesday, March 30, 2011

விஜயகாந்த் விவகாரம்: அதிமுகவினர் - பாமகவினர் மோதல்



அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்தனர்.



ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்கவார்சத்திரம் பகுதியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உருவபொம்மையை பா.ம.க.,வினர் எரிக்க முயற்சி செய்தனர். தகவலறிந்து வந்த அ.தி.மு.க.,வினருக்கும் பா.ம.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


இந்த மோதலில் அ.தி.மு.க.,வினர் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



No comments:

Post a Comment