Monday, March 28, 2011

ஜெயலலிதாவுக்கு நன்மை செய்யும் மனசு வராது: குஷ்பு


தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு செய்ய மனசு வராது என, நடிகை குஷ்பு பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, கொசவப்பட்டி ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் நடிகை குஷ்பு பேசினார். அவர் கூறியதாவது:

தி.மு.க. தொண்டராக இங்கே வந்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஊரின் மகளாக வந்திருக்கிறேன். தமிழகத்தில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இந்த மின்தடைக்கு தி.மு.க.வோ, கலைஞரோ காரணம் கிடையாது. மின்தடை ஏற்படுவதற்கு ஜெயலலிதாவும், அந்த துறை அமைச்சராக இருந்த இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான விசுவநாதனும் தான் காரணம். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை மின் உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளவில்லை.

தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எதுவுமே செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு செய்ய மனசு வராது. மக்களுக்கு நன்மை செய்யும் மனசு தலைவருக்கு தான் உண்டு. மக்களை பற்றியே அவர் சிந்தித்து கொண்டிருக்கிறார். தனது 12 வயது முதல் 87 வயது வரை 75 ஆண்டு காலம் அவர் அயராது உழைத்து வருகிறார்.


மழையிலும், வெயிலிலும் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் தொடங்கினார். மீண்டும் வெற்றி பெற்றால், இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அவர் நிறைவேற்றி இருக்கிறார். கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகை ஆகியவற்றை உயர்த்தியும், கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை வழங்கவும் இருக்கிறார். சொன்னதை மட்டும் செய்யாமல், சொல்லாததையும் அவர் செய்திருக்கிறார். குளிர்சாதன பெட்டி, வாசிங் மிஷனும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார் என்றார்.



No comments:

Post a Comment