Wednesday, April 27, 2011

கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!


வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஷைனி அஹுஜாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட அவருக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதில், அவருக்கு இன்று ஜாமீன் வழங்கப்பட்டது. ரூ 50000 ரொக்க ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.


No comments:

Post a Comment