Friday, April 29, 2011

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - படங்கள்


நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏவி. எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது.   


நாயகி தீபிகா படுகோனேவுடன் பாடல் காட்சி படப்பிடிப்பின் போது ரஜினிக்கு  வயிறு கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை உடனடியாக மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

ரஜினியில் உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.


பின்னர் வெளியே வந்த முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம்,  ‘’சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார்’’ என்று தெரிவித்தார்.




No comments:

Post a Comment