Friday, April 29, 2011

ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'


ரஜினிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளதாகவும் இன்று செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று தனது கனவுப் படமான ராணாவை பூஜையுடன் தொடங்கினார்.

முதல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு, ரஜினி வீடு திரும்பினார். சிறிது நேரத்தில், "ரஜினிக்கு மூச்சுத் திறணல், மருத்துவமனையில் அனுமதி' என செய்திகள் பரவ, தமிழகமே பரபரத்துப் போனது.

இதுகுறித்து ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் தொடர்பு கொண்டோம். அவர்கள் கூறுகையில், "சார் நலமாக உள்ளார். படம் தொடங்கிவிட்டபடியால் வழக்கமான ஒரு செக்கப்புக்காக அவர் மருத்துவமனைக்குப் போனார். அவ்வளவுதான்" என்றனர்.

இதுகுறித்து ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கூறுகையில், "ரஜினி சார் மிக நல்ல முறையில் ராணா படத்தைத் தொடங்கியுள்ளார். படம் தொடங்கிவிட்டதால் வழக்கமாக மேற்கொள்ளும் செக்கப்புகளுக்காகவே அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அதற்குள் விபரீத அர்த்தம் கற்பித்துவிட்டனர். அவர் நலமுடன் உள்ளார்," என்றார்.


No comments:

Post a Comment