Thursday, April 28, 2011

விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்


ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் ’’வேலாயுதம்’’.    இப்படத்தின் 80சதவீத சூட்டிங் முடிவ‌டைந்த நிலையில், மீதி படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


விஜய் பிறந்தநாளான ஜூன் -22ல்  இப்படம் வெளியாக இருக்கிறது.


இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.  வெற்றி பெற்ற அணி நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 


திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப்பற்றியே நினைக்க மாட்டார் ஜெயலலிதா.   அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெற்றால்புதிய அமைச்சரவை தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலும் ஜெயலலிதா இந்த விழாவில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறிதான்.  



No comments:

Post a Comment