Friday, April 29, 2011

வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!


தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் வடிவேலு ஊரில் இருக்கப் போவதில்லை. எல்லாம் ஒரு பாதுகாப்பு கருதிதான் என்றெல்லாம் செய்திகள் பரவின. அதற்கேற்றார் போல அவரும் குடும்பத்தோடு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். அவர் எங்கே செல்கிறார். இது உள்ளூர் ட்ரிப்பாவெளிநாட்டு சுற்றுலாவா என்றெல்லாம் மண்டையை குடைந்து கொண்டது கோடம்பாக்கம். இது பத்து நாட்களுக்கு முன்பு எழுந்த பரபரப்பு.

எல்லா கணிப்புகளையும் பொய்யாக்குவது போல மீண்டும் சென்னைக்கு திரும்பிவிட்டார் வடிவேலு. நான் உள்ளூர்லதான் இருக்கேன் செல்லங்களா என்று கூறுவது போல தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்கு போன் அடித்துஅண்ணே... அப்புறம் என்ன விசேஷம் என்கிறாராம் கூலாக!

நீங்க லண்டன் போயிட்டதா... என்று இவர்கள் இழுக்கஅட போங்கண்ணே. இந்தா இருக்கிற பெங்களூருக்குதான் போயிருந்தேன். அதுக்குள்ளே போட்டு தாளிச்சிட்டாங்களா என்றாராம்!

பீர் பாட்டில்ல மோர் ஊற்றி வச்ச மாதிரி பொசுக்குன்னு போயிருச்சே சுவாரஸ்யம்!
 ஆனா, விஜயகாந்த் பாதுகாப்பு கருதியோ என்னமோ ஆளு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிட்டாரு ! ஓட்டு எண்ணிக்கை அன்னைக்கும் வாருவதாக சொல்லி இருக்கார். ஆனா, அன்னைக்கு பார்த்து அவரோட 'flight'  ' ட்ராப்பிகல' மாட்டாம இருந்தா சரி !! 


No comments:

Post a Comment