Friday, April 1, 2011

விஜயகாந்த்தை மேடையில் ஏற்றுவாரா ஜெ.? ஸ்டாலின்


தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

சிவகாசி பஸ் நிலையம், சிவன்கோவில் அருகில், சிவகாசி தேவர்சிலை ஆகிய இடங்களில் அவர் பேசினார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:


தி.மு.கழக தலைமையிலான கூட்டணி, மக்கள் கூட்டணி, கவுரவமான கூட்டணி. தலைவர் கலைஞர் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தி கொண்டு இருக்கிறார்.


ஆனால், மாற்று அணியில் மிகப்பெரியக் குழப்பம் இருக்கிறது. ஜெயலலிதா எந்த கூட்டணி கட்சித் தலைவரோடும் சேர்ந்து எந்த இடத்திலும், பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. புதிதாக


ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்துள்ள முன்னாள் கதாநாயகன், நான் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியுடன் தான் கூட்டு வைத்துள்ளேன் என்று தெரிவித்து வருகிறார்.

ஆனால், ஜெயலலிதா அ.தி.மு.க மேடையில், அந்த முன்னாள் கதாநாயகனை ஒரு முறையாவது ஏற்றுவாரா? இப்படி அந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தலைவரிடையேயும், முரண்பாடுகள் மேலோங்கி இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்துவிடுவார்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment