Tuesday, April 26, 2011

தபால் அலுவலகங்களில் தங்கத்திற்கு தங்கம் இலவசம்


அட்சய திருதியையை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தங்கம் வாங்குவோருக்கு தங்கம் இலவசம் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மண்டல அஞ்சல் துறையின் கீழுள்ள தபால் அலுவலகங்களில் தங்க நாணய விற்பனைத்திட்டம் செயல்பட்டு வருகிறது. தலைமை தபால் அலுவலகம் மற்றும் துணை தபால் அலுவலகங்களில் 0.5கிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் மற்றும் 20 கிராம் தங்க நாணயங்கள் விற்கப்படுகின்றன.


அட்சய திருதியை முன்னிட்டு தங்க நாணயம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

10 கிராம் தங்க நாணயம் வாங்குவோருக்கு 0.5 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதே போல 20 கிராம் தங்க நாணயம் வாங்குவோருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

இது தவிர சிறப்பு சலுகையும் உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வாங்கும் தங்க நாணய மதிப்பிற்கு 6 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment